• முகப்பு
  • வரலாறு
    • திருநீலகண்ட நாயனார்
    • 7 கன்னிமார்கள்
    • 24 நாடுகள், இணைநாடுகள்
    • குலதெய்வம்‌ என்றால்‌ என்ன ?
  • பூஜைகள்
  • நிர்வாகம்
  • புகைப்படம்
  • ஆன்மீகம்
  • இருப்பிடம்

24 நாடுகளும் இணைநாடுகளும்



வரலாறு


  திருநீலகண்ட நாயனார் வரலாறு

  கன்னிமார் வரலாறு

  24 நாடுகளும் இணைநாடுகளும்

  குலதெய்வங்கள்‌ என்றால்‌ என்ன ?


கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளும் இணைநாடுகள் சிலவும் இருந்ததாகக் "கொங்கு மண்டல சதகம்" 3-ஆம் பாடல் தெரிவிக்கிறது. அவற்றை உரைநூல் ஒன்று குறிப்பிடுகிறது. அவற்றின் அகரவரிசை வருமாறு. 24 நாடுகள்:

  1. அண்ட நாடு
  2. அரையன் நாடு
  3. ஆறை நாடு
  4. ஆனைமலை நாடு
  5. இராசிபுர நாடு
  6. ஒருவங்க நாடு
  7. காங்கேய நாடு
  8. காஞ்சிஒடுவங்க நாடு
  9. காவடிக்கன் நாடு
  10. கிழங்கு நாடு
  11. குறும்பு நாடு
  12. தட்டையன் நாடு
  13. தலையன் நாடு
  14. திருவாவினன்குடி நாடு
  15. தென்கரை நாடு
  16. நல்லுருக்கன் நாடு
  17. பூந்துறை நாடு
  18. பூவாணிய நாடு
  19. பொங்கலூர் நாடு
  20. மணல் நாடு
  21. வடகரை நாடு
  22. வாரக்கன் நாடு
  23. வாழவந்தி நாடு
  24. வெங்கால நாடு

இணைநாடுகள்

  1. இடைப்பிச்சான் நாடு
  2. ஏழூர் நாடு
  3. சேல நாடு
  4. தூசூர் நாடு
  5. பருத்திப்பள்ளி நாடு
  6. விமலை நாடு

24 நாடுகளைத் தொகுத்துப் பாடலாகவும் பாடினர்


சொல்ல அரி தானபூந்தது துறைசைதென் கரைநாடு
தோன்றுகாங் கேயநாடு
தோலாத பொன்கலூர் நாடு திகழ் ஆறையளி
தோய்ந்தவர் ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு ஆவிநன் குடிநாடு
மணநாடு தலையநாடு
வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம்
வடகரை கிழங்கு நாடு
நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட
நாடு வெங் காலநாடு
நாவலர்கள் சொல்கா வடிக்காநாடு ஆனைமலை
இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில்
இயல்செறி குறும்நாடு
இனியபுகழ் சேர்கொங்கு மண்டலந் தனிலான
இருபத்து நான்குநாடே

இன்றும் மேற் கூறிய நாடுகளில் திருமண பேச்சு நடத்தும் போது எந்த நாட்டினர் என்று உறுதிபடுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நாட்டுக்காரர் பங்காளியாகவும், மற்றவர் மாமன் மச்சாம் முறையாகவும் கொள்ளப்படுகிறது.

® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.