சப்தகன்னியர் எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் சிவசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் சப்த மாத்திரிகைக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.