• முகப்பு
  • வரலாறு
    • திருநீலகண்ட நாயனார்
    • 7 கன்னிமார்கள்
    • 24 நாடுகள், இணைநாடுகள்
    • குலதெய்வம்‌ என்றால்‌ என்ன ?
  • பூஜைகள்
  • நிர்வாகம்
  • புகைப்படம்
  • ஆன்மீகம்
  • இருப்பிடம்
காஞ்சி ஒடுவங்க நாட்டு குலாலர் குலதெய்வம்
அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில்
ராஜா நகர், பெத்தாம்பாளையம், ஈரோடு மாவட்டம் - 638116.



அருள்மிகு விநாயகர் துதி


  ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
  இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
  நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
  புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே !
 

அருள்மிகு இராசாக்கள்


  இராசா ! இராசா ! எனச் சொல்லி
  சிந்தையில் நிறுத்தும்போது
  அவன் கருணையே அங்கே
  அளவின்றிப் பொழியக்கூடும் !
  முகம் ஒளியாய் மின்னும்
  மோகமுள் வலியும் போகும் !
  சுபம் சபமே நித்தம்
  சூழ்நிலை எங்கும் காணும் !
  மனதிலே இராசாக்களைப் பூட்டி
  மந்திரத்தால் அவனைக் கட்டி
  சினந்தனைச் சீவித் தள்ளி
  சிரித்த முகத்தைக் காட்டி
  நினைவிலே இராசா ! இராசா ! என்றே
  நினைக்கிற பழக்கம் தன்னை
  கணந்தோறும் செய்து வந்தால்
  காலமே கைகட்டி நிற்கும் !
  உருவமாய் உள்ள ஒன்றை
  உள்ளத்தில் இராசாவாய் கொண்டு
  கருமமாய் இராசா ! இராசா ! என்று
  காலமும் சொல்லிவந்தால்
  உருவமே இராசாக்களாகி
  உள்ளுக்குள் ஆட்சி செய்யும்
  தருமமே துணையாய் நின்று
  தவமே நல்வாழ்வு மாகும் !
  கத்தியை வலக்கையில் வைத்து!
  கேடயத்தை இடக்கையில் வைத்து
  பாரினைக் காலின் கீழே
  பாந்தமாய்க் காத்து நிற்கும்
  ஈசனாம் சிவஇராசாக்களின் நாமம்
  சிந்தை செய்யச் செய்ய
  வாசமாய் மாறும் வாழ்க்கை
  வணங்குவாய் இராசா என்ற நெஞ்சே !
  இராசா நகரமர்ந் துறையும்
  இராசாக்கா உன் குடிகள்
  வளர்ந்தோங்க வணங்குகிறோம் !
  வரம் தருவாய் மனம் உருகி
  நெஞ்சம் கசிந்துருகி வேண்டுகிறோம்
  நெஞ்சினினே குடி கொள்வாய் !
  குலந்தழைக்க ! குலக்கொழுந்தே !


கோபுர தரிசனம்


  கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !
  கோபுர தரிசனம் பாவ விமோசனம் !
 

"குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு"

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெத்தாம்பாளையம் கிராமம் காஞ்சி ஒடுவங்க நாட்டு குலாலர் குலதெய்வம் அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ பழமையும் பெருமையும் வாய்ந்த கொங்குநாடில் அழகுற அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு ராஜா நகர் என அழைக்கப்படுகிறது. பெருந்துறையில் இருந்து 6 KM தொலைவில் பெத்தாம்பாளையம் செல்லும் வழியில் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து (ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல்) அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள். காஞ்சி ஒடுவங்க நாட்டு குலாலர் இன மக்கள் கோயில் கட்டி தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். மேலும் ஊர்ப்பொதுக்களும் வழிபட்டு வருகிறார்கள்.

அமாவாசை வழிபாடு : ஒவ்வொரு அமாவாசை அன்று பகல் 12 மணி அளவில் இந்த திருக்கோயிலில் சிறப்பான முறையில் அபிஷேகம் செய்து பூஜை, ஆராதனைகள்‌ நடந்து வருகிறது, மேலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையும்‌ நடந்து வருகிறது.

பௌர்ணமி வழிபாடு : ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை 6 மணி அளவில் இந்த திருக்கோயிலில் முத்தாய் அம்மனுக்கு சிறப்பான முறையில் அபிஷேகம் செய்து பூஜை, ஆராதனைகள்‌ நடந்து வருகிறது, மேலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெறுகிறது.

திருநீலகண்ட நாயனார் குரு பூஜை வழிபாடு : தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்ட நாயனார் குரு பூஜை சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

திருவிளக்கு பூஜை வழிபாடு : திருவிளக்கு பூஜை வழிபாடு இந்த திருக்கோயிலில் சிறப்பான முறையில் பூஜை, ஆராதனைகள்‌ நடந்து வருகிறது, மேலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெறுகிறது.

சங்கடஹர சதூர்த்தி & கிருத்திகை : பிரதி மாதம் சங்கடஹர சதூர்த்தி மற்றும் கிருத்திகை சிறப்பான முறையில்‌ கட்டளைதாரார்களால் பூஜை நடந்து வருகிறது.

இதர பூஜைகள் : தைப்பூசம், கந்த சஷ்டி கவசம், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், மஹா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, ஆடி பெருக்கு, தீபாவளி, பங்குனி உத்திரம், மார்கழி மாத பூஜைகள் இந்த திருக்கோயிலில் சிறப்பான முறையில்‌ நடந்து வருகிறது.

கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன. தமிழில் கோயில் என்னும் சொல் கோ + இல் எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே கோ என்பது இறைவனையும், இல் என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். எனவே கோயில் என்பது "இறைவன் வாழுமிடம்" என்னும் பொருள் தருகிறது. பொது வழக்கத்தில் கோயில் மற்றும் கோவில், என்ற இரு சொற்களும் உண்டு. தமிழ் இலக்கண விதிப்படி கோவில் என்றே வருகிறது.

தெய்வ வழிபாடு இருநிலைகளாக மேற்கொள்ளப்படுகின்றன. அவை பெருநெறி வழிபாடு, சிறுநெறி வழிபாடு என்பனவாம். பெருநெறி என்பது சிவன் திருமால் முதலான தெய்வங்களை வழிபாடு செய்வது ஆகும்.
ஐயனார் முனியாண்டி, காளியம்மன், மாரியம்மன் முதலான தெய்வங்களை வழிபடுதல் சிறுநெறி வழிபாடாகும். கிராமங்களுக்கு சிறு தெய்வ வழிபாடுகள் உயிர்நாடியாக விளங்குகின்றன.


  அமாவாசை பூஜை  

  பௌர்ணமி பூஜை  

  சித்திரை 1 ஆம் நாள் பூஜை  

  தைப்பூசம்  

  திருநீலகண்ட நாயனார் குரு பூஜை  

  கார்த்திகை தீபம்  

  மஹாசிவராத்திரி பூஜை  

  சூரசம்ஹாரம்  

  விநாயகர் சதுர்த்தி  

  ஆடி பெருக்கு  

  சங்கடஹர சதூர்த்தி  

  கிருத்திகை  

  பங்குனி உத்திரம்  



  காலை 06:00 மணி முதல்
  மாலை 08:00 மணி வரை

வரலாறு


  திருநீலகண்ட நாயனார் வரலாறு

  கன்னிமார் வரலாறு

  குலதெய்வம் என்றால்‌ என்ன


பூஜைகளும் கட்டளைதாரர்களும் 

மேலும் படிக்க...

ஆன்மீக குறிப்புகள் 

மேலும் படிக்க...

24 நாடுகளும் இணைநாடுகளும் 

மேலும் படிக்க...

மகா கும்பாபிஷேக நாள்


  1. ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாதம் 19-ஆம்  நாள் சித்திரபானு வருடம் 2002-ஆம் ஆண்டு (02-June)
  2. புதன்கிழமை மாசி மாதம் 28-ஆம் நாள் விஜய வருடம்  2014-ஆம் ஆண்டு (12-March)
 

பெரும் பொங்கல் விழா


  1. ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம் 28-ஆம்  நாள் சுபானு வருடம் 2003-ஆம் ஆண்டு (11-May)
  2. சித்திரை மாதம் 2015-ஆம் ஆண்டு
 

® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.